Rose Gulkand / ரோஜா குல்கந்து
₹635.00 – ₹1,035.00
ரோஜா, தேன் , கற்கண்டு சேர்த்து அருமையாக செய்த ரோஜா குல்கந்து.
வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம். பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவும், சிறியவர்களுக்கு 1 டீஸ்பூன் அளவும் கொடுக்க வேண்டும்.
தினமும் வெறும் வயிற்றில் இதை எடுத்துகொள்ளலாம். வளரும் பிள்ளைகளுக்கு பாலில் கலந்து மில்க் ஷேக் போன்று கொடுக்கலாம். வெற்றிலையின் உள்ளே வைத்தும் பீடாவில் சேர்த்து சாப்பிடலாம். பாலில் அப்படியே கலந்தும் குடிக்கலாம். தினமுமே இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மலச்சிக்கல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மலச்சிக்கல் இருக்கும் போது ரோஜா குல்கந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும். மலச்சிக்கல் இருக்கும் போது வெந்நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால் மலம் இளகி மலச்சிக்கல் குறையும். தினமும் இரவில் இதை சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளும் மலச்சிக்கல் இருக்கும் போதும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உண்டாகும் போதும் வெந்நீருடன் இதை சாப்பிட்டு வரலாம்.
வயிற்று கோளாறுகள்
வயிறு பிரச்சனை, வாயு கோளாறுகள், வயிற்றுப்புண், செரிமானக்கோளாறுகள் என அனைத்தையும் போக்க ரோஜா குல்கந்து உதவும். இது காரத்தன்மை கொண்டுள்ளதால் வயிற்றில் இருக்கும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. வயிறு மந்தமாக இருக்கும் போது குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள்.
காய்ச்சல் வந்தா இந்த உணவும் சாப்பிடுங்க, காய்ச்சல் காணாம போகும்!
அவர்களுக்கு காலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கொடுத்துவந்தால் செரிமானக்கோளாறுகள் சீராகி பசியின்மை பிரச்சனை நீங்கும். நன்றாக பசி எடுத்து குழந்தைகள் சாப்பிட செய்வார்கள். பெரியவர்கள் ஜீரணகோளாறுகளை கொண்டிருந்தால் அவர்களும் தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட்டால் ஜீரண மண்டலம் சீராக செயல்படும்.
பித்தம் நீக்கும்
பித்தம் பிரட்டலோடு இருக்கும் போது அதை போக்க ரோஜா குல்கந்து உதவும். பித்தம் அதிகமாகும் போது கிறுகிறுப்பு, வாந்தி, குமட்டல் உணர்வு போன்றவை உண்டாக கூடும். இதற்கு ரோஜா இதழ்களை கொதிக்க வைத்து ருசிக்கு நாட்டு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை குடித்துவந்தால் பித்தம் நீங்கும். அதற்கு மாற்றாக ரோஜா குல்கந்து எடுத்துகொள்ளலாம். இது பித்த பிரட்டலை குறைக்க செய்யும்.
ஆண்மைக்கு உதவும் ,பெண்களுக்கும்
ரோஜா குல்கந்து ஆண்மை பெருக்கி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது. இன்று கணினியில் பணி புரியும் ஆண்கள் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது விந்தணுக்கள் எண்ணிக்கை வீரியம் குறையக்கூடும். உணவு முறை, வாழ்க்கை முறை மோசமாக கடைபிடிக்கும் ஆண்களுக்கு இது மலட்டுத்தன்மையை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால் இந்த குறைபாடு உண்டாவதற்கு முன்பே இரவில் பாலில் குல்கந்து கலக்கி கொடுத்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் . வீரியம் அதிகமாக இருக்கும். ஆண்மை குறைபாடு உண்டாகாது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கால வயிறு வலி போன்ற உபாதைகளை குறைக்கவும் இது உதவுகிறது.
இதயத்துக்கு நல்லது
துவர்ப்பு சுவை கொண்டுள்ளதால் ரோஜா குல்கந்து ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் இவை செயல்படுகிறது.
இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் இது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் சரும பளபளப்பை அதிகரிக்கும்.
Rose Gulkand
Ingredients:
– Fresh Rose Petals
– Honey
– Palm candy
– Ginger Powder
How to Use:
1. Spoonful of Sweetness : Enjoy a teaspoon of Rose Gulkand on its own for a delightful treat.
2. In Beverages: Enhance milkshakes, lassi, or herbal teas by adding a teaspoon of Rose Gulkand.
3. Dessert Delight: Elevate your desserts – ice cream, custard, pastries – by incorporating Rose Gulkand.
4. Unique Sandwich: Spread on bread or roti for a uniquely flavored sandwich.
5. Digestive Aid: Consume a small amount after meals to aid digestion and freshen your breath.
Benefits:
– Cooling Properties: Perfect for hot days, it has a cooling effect on the body.
– Digestive Aid: Helps alleviate acidity and constipation.
– Stress Reduction: The aroma of rose petals calms the mind, reducing stress and anxiety.
– Skin Benefits: Promotes healthy skin by detoxifying the body.
– Rich in Antioxidants: Boosts immunity and fights free radicals
– Aids Menstrual Issues: Offers relief from menstrual discomfort for some women.
– No Artificial Preservatives
– Store in a Cool, Dry Place
Expiry : 12 months from packaging
Weight | N/A |
---|---|
Dimensions | N/A |
weight | 1KG, 500GM |
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Related Products
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை(masala kadalai) இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
நம்ம ஊர் திருவிழாவுல இனிப்பு சேவுக்காக அழுது அடம்பிடிச்சிருப்போம்.
இனி மொறு மொறு இனிப்பு சேவு உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
2 வாரம் வைத்து சாப்பிடலாம்
81 in stock
வீட்டு தயாரிப்பு இட்லி பொடி
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
Cash on Delivery now available!
Out of stock
திருநெல்வேலி மிளகுகாரச்சேவு இனி உங்கள் இல்லம் தேடி
60 in stock
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை!
cash on delivery not available
அதிக புரதசத்து நிறைந்த நெய் பொரிகடலை உருண்டை உங்கள் இல்லம் தேடி
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
86 in stock
Reviews
There are no reviews yet.